பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன், ஸ்கூட்டர் : உ.பி.யில் பிரியங்கா தேர்தல் வாக்குறுதி

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேசத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பெண்களுக்கான 6 அம்ச தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா நேற்று வெளியிட்டுள்ளார்.

அதில், உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன், பட்டப்படிப்பு மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும். பெண் களுக்கு ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள், மூதாட்டிகள் மற்றும் விதவைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம், புதிதாக பிறக்கும் பெண் குழந்தையின் பெயரில் வைப்பு நிதி, அனைத்து குடும்பங்களுக்கும் இலவச இன்டெர்நெட் இணைப்பு வழங்கப் படும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரியங்காதனது அறிவிப்பில், “பெண்களுக்கான இந்த தேர்தல் அறிக்கை மற்ற கட்சிகளுக்கும் பெண்களின் பிரச்சினைகளை பேச நெருக்குதல் கொடுக்கும் என நம்புகிறேன்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 40 சதவீத பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். கொள்கை முடிவுகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க இது உதவும். மாநில காவல் துறையில் 25 சதவீதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும். இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்