மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,306 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய தினத்தை விட 6.62 சதவீதம் குறைவாகும். மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3,46,41,561 ஆக உயர்ந்துள்ள வேளையில், சிகிச்சையில் இருப் போர் எண்ணிக்கை 98,416 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 211 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட் சத்து 73,537 ஆக உயர்ந்துள்ளது.
மொத்த நோயாளிகளில் 0.28 சத வீதம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றுக்கு 98.35 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர்.
கரோனா பரிசோதனையில் தினசரி பாசிட்டிவ் விகிதம் 0.94 சதவீதமாக உள்ளது. வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 0.78 சதவீதமாக உள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி செலுத்தும் பணியில் இதுவரை 127.93 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
கரோனா தொற்றுக்கு இதுவரை 4,73,537 பேர் உயிரிழந்த நிலையில் இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,41,170 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து கேரளாவில் 41,600 பேரும் கர்நாடகாவில் 38,230 பேரும் தமிழ்நாட்டில் 25,098 பேரும் இறந்துள்ளனர். டெல்லியில் 22,911 பேர், உ.பி.யில் 19,544 பேர், மேற்கு வங்கத்தில் 19,544 பேர் உயிழந்துள்ளனர்.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago