ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், ராயதுர்கம் பகுதியில் இருந்து கும்மகட்டா பகுதியை நோக்கி ஷேர் ஆட்டோவில் நேற்று 9 பேர் சென்று கொண் டிருந்தனர். அப்போது, எதிரே, கோனபாவி பகுதி யிலிருந்து ராயதுர்கம் நோக்கி சென்று கொண்டிருந்த ஜீப்பும், ஷேர் ஆட்டோவும் பூலகுண்டா எனும் இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த நாகம்மா (60), சேகர் (20), ரக்ஷிதா (5), மகேந்திரா (4) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக அனந்தபூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.
இது குறித்து ராயதுர்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago