சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் அருள்பாலிப்பு :

By செய்திப்பிரிவு

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலின் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனால், கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் பிரம்மோற்சவம் ஏகாந்தமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 7ம் நாளான நேற்று காலை தாயாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின்னர், வாகன மண்டபத்தில் வேணுகோபாலன் அலங்காரத்தில், சூரிய பிரபை வாகனத்தில் தாயார் எழுந்தருளி அருள் பாலித்தார். இதில், ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து, இரவு சந்திரபிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளினார்.

பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நாளை பஞ்சமி தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், கரோனா காரணமாக இம்முறை பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சியையும் ஏகாந்தமாக நடத்த தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. இதனையொட்டி, 8-ம் தேதி காலை 11.52 மணிக்கு பஞ்சமி தீர்த்தம் நிகழ்ச்சிகள் (சக்கர ஸ்நானம்) நடைபெற உள்ளன. மறுநாள் 9-ம் தேதி கோயிலில் புஷ்பயாகம் நடத்தப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்