பெங்களூரு: தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 66 வயதான மருந்து நிறுவன ஊழியர் கடந்த நவம்பர் 20ம் தேதி பெங்களூரு வந்தார். கெம்பே கவுடா விமான நிலையத்தில் அவருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட போது, கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஷாங்கிரி லா நட்சத்திர விடுதியில் 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் அவரது அடுத்தகட்ட சோதனை முடிவுகள் கடந்த 2-ம் தேதி வெளியானது. அதில் மருந்து நிறுவன ஊழியருக்கு நாட்டிலேயே முதல் முறையாக உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் அந்த நபரை தேடி நட்சத்திர விடுதிக்கு சென்றனர். ஆனால், அவர் கடந்த 27-ம் தேதியே தென் ஆப்பிரிக்கா சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின்படி பெங்களூரு ஹைகிரவுண்ட் போலீஸார் தென்னாப்பிரிக்க நபர், ஷாங்கிரி லா விடுதி மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மருந்து நிறுவன ஊழியர் எதற்காக பெங்களூரு வந்தார்? ஏன் 14 நாட்கள் கட்டாய தனிமையை பின்பற்றவில்லை? 5 நாட்களுக்குள் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றது எப்படி? அந்த சான்றிதழை பெறுவதில் ஏதேனும் முறைக்கேடு நடைபெற்றுள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago