50 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி சுகாதார அமைச்சர் மாண்டவியா வாழ்த்து :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரோனா தொற்றை தடுக்க நாடு முழுவதும் மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி போடத் தகுதியுள்ள 18 வயதுக்கு மேற்பட்டோரில் 50%-க்கும் அதிகமானோருக்கு 2 டோஸ்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதற்காக ட்விட்டரில் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘வாழ்த்துக்கள் இந்தியா. தகுதியான மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமானோருக்கு இப்போது முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளது, இந்தியாவுக்கு இது மிகவும் பெருமைக்குரிய தருணம். கரோனாவுக்கு எதிரான போரில் நாம் இணைந்து போராடி வெற்றி பெறுவோம்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்