ஜோவத் புயல் வலுவிழந்தது ஒடிசா மாநிலத்தில் கனமழை :

By செய்திப்பிரிவு

ஜோவத் புயல் வலுவிழந்த நிலையில், ஒடிசாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப் பெற்று ஆந்திரா வழியாக ஒடிசாவை நோக்கி நகர்ந்த நிலையில், புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுவிழந்து மேற்கு வங்க கடற்கரையை நோக்கி செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஒடிசாவின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கன்ஜாம், குர்தா, கேந்திரபாரா, ஜகதீஷ்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. கன்ஜாம் மாவட்டத்தில் கலிகோட் என்ற இடத்தில் அதிக அளவாக 158 மி.மீ. மழை பெய்துள்ளது. கன்ஜாம் மாவட்டத்தில் அதிகபட்ச சராசரி அளவாக 47.88 மி.மீ., ஜகதீஷ்பூரில் 38.3 மி.மீ., கேந்திரபாராவில் 35.7 மி.மீ. குர்தா 33 மி.மீ., புரி 25.5, பத்ராக் 21.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

படிப்படியாக குறையும்

நயாகர், கட்டாக்கில் முறையே 21.6மி.மீ, 20.5 மி.மீ. மழை பெய்துள்ளது. புரி கடற்கரை பகுதியில் புயல் நேற்று பிற் பகல் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட னர். ஞாயிறு மாலை வரை மழை நீடிக்கும் என்றும் பின்னர் படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்