தேசிய அளவில் மம்தா கூட்டணியில் சேர சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் விருப்பம் :

By ஆர்.ஷபிமுன்னா

தேசிய அளவில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அணி யாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) உள்ளது. இதன் தலைமை காங்கிரஸிடம் இருப் பதால் அதற்கு இணையாக மற் றொரு அணியை உருவாக்க மேற்கு வங்க முதல்வரும் திரிண மூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முயன்று வருகிறார். இதற்காக கடந்த ஒரு வாரமாக அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு யுபிஏ கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் மம்தாவின் புதிய கூட்டணியில் தானும் சேரத்தயாராக இருப்பதாக உ.பி. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் சிங் யாதவ் அறிவித்துள்ளார்.

உ.பி.யில் வரவிருக்கும் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க அகிலேஷ் தீவிரப் பிரச்சாரத்தில் மூழ்கியுள்ளார். இப்பயணத்தில் அவர் நேற்று ஜான்சியில் செய்தி யாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “மம்தா தீதியின் புதிய அணியை நான் வரவேற்கிறேன். அவரது அணி யில் சமாஜ்வாதியும் சேரத் தயாராக உள்ளது. மேற்கு வங்கத்தில் அவர் பாஜகவை வீழ்த்தியதை போல உ.பி.யிலும் தோற்கடிப்போம். நேரம் வரும்போது தேசிய அணி குறித்து மம்தா தீதியிடம் பேசுவேன்” என்றார்.

அகிலேஷை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா, தொடர்ந்து விமர்சித்து வருகிறார். லக்கிம்பூரில் விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் இறந்ததற்கு அகிலேஷ் நேரில் செல்லவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அகி லேஷ் பதில் அளிக்கும்போது, “உ.பி.யில் பிரியங்காவை மக்கள் புறக்கணிக்கின்றனர். எனவே இங்கு காங்கிரஸுக்கு பூஜ்ஜியம் இடங்கள் தான் கிடைக்கும்” என்றார்.

உ.பி. தேர்தலையொட்டி மாநிலக் கட்சிகளுடன் சமாஜ்வாதி கூட்டணி அமைத்து வருகிறது. இதில் ஜாட் சமூகக் கட்சியான ராஷ்டிரிய லோக் தளமும் இடம்பெற்றுள்ளதால் மேற்குப் பகுதியில் விவசாயிகளின் வாக்கு தமக்கு கிடைக்கும் என அகிலேஷ் நம்புகிறார்.

இந்த வாக்குகளை பங்கிட்டுக்கொள்ள பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் முயன்று வருகின்றன. இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதால் விவசாயிகளின் வாக்கு தங்களுக்கு மீண்டும் கிடைக்கும் என பாஜக நம்புகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்