நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8,603 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 415 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து ஒரு லட்சத்துக்கு கீழ் உள்ளது. தற்போது 99,974 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 8,603 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 24,360 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு குணமடைவோர் 98.35 சதவீதமாக உள்ளனர்.
எனினும், நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 70,530 ஆக உயர்ந் துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 415 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினசரி பாசிட்டிவ் 0.69 ஆகவும், வாராந்திர பாசிட்டிவ் 0.81 சதவீதமாகவும் உள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்துக்குப் பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். சிகிச்சைக்குப் பின்னர் குண மடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 53,856 ஆக உயர்ந்தள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 126.53 கோடி டோஸ் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago