மத்திய புலனாய்வு அமைப்பு களான சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக இருந்தது. அந்த பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிக்க கடந்த நவம்பர் 14-ம் தேதி அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன.
இந்த அவசர சட்டங்களுக்கு மாற்றாக மசோதாக்கள் மக்கள வையில் நேற்று அறிமுகம் செய்யப் பட்டது. மத்திய பணியாளர் நலத் துறை இணை யமைச்சர் ஜிதேந்திர சிங் இரு மசோதாக்களையும் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறும்போது, "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கூறும்போது, சிபிஐ, அமலாக்கத் துறையை மத்திய அரசு கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. இரு அமைப்புகளையும் ஏவி எதிர்க்கட்சி களை மத்திய அரசு பழிவாங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இயக்குநர்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சுரேஷ், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோரும் மசோதாக் களுக்கு எதிராக பேசினர். -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago