நாற்பது வயது மேற்பட்டவர்களுக்கு - பூஸ்டர் டோஸ் போடுவதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் : இந்திய ஆய்வு கூட்டமைப்பு பரிந்துரை

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், இந்தியாவில் கரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்ட 40 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கரோனா உருமாற்றத்தைக் கண் காணிக்கும் இந்திய அமைப்பு கூறியுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கரோனா வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு இருப்பது நவம்பர் 24-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு பல நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்தன.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளிலும் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது நேற்று முன் தினம் உறுதி செய்யப்பட்டது. ஒமிக் ரானை ‘கவலைக்குரிய திரிபு’ என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கரோனா தடுப்பூசி யின் இரண்டு டோஸ்களும் போட்டுக் கொண்ட 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கரோனா உருமாற்றத்தைக் கண்காணிக்கும் இந்திய கூட்ட மைப்பு கூறியுள்ளது.

தடுப்பூசி ஒமைக்ரானை முழுமையாக எதிர்க்கும் ஆற்றலைக் கொண்டிருக்க வில்லை என்றும், ஒமிக்ரானை எதிர் கொள்ள பூஸ்டர் ஊசி அவசியம் என்றும் கூறப்பட்டு வருகிறது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்