காற்று மாசுக்கு எதிரான நடவடிக்கைகள் டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, காற்றுத் தர ஆணையத்தின் சாரபில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை படித்தார். அந்த அறிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். ஆணையத்தின் அறிக்கையில் கூறியுள்ள நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கும் டெல்லி மாநில அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், காற்றுத் தர ஆணையத்தின் வழிகாட்டுதல்படி டெல்லியில் 21 மருத்துவமனைகளின் கட்டுமானத்தைத் தொடர உத்தரவிட்ட நீதிபதிகள், பள்ளிகளை மூடுவது குறித்து அரசுதான் முடிவெடுத்தது என்றும் சில ஊடகங்களில் வெளியானது போல நீதிமன்றம் முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். வழக்கு விசாரணையை 10-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்