நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் : 9,765 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி; கடந்த 24 மணி நேரத்தில் 9,765 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் 477 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,765 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 477 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 4 லட்சத்து 69,724 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 8,548 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 3 கோடியே 40 லட்சத்து 37,054 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் குணமடைந்வோர் சதவீதம் 98.35 ஆக உள்ளது.

நாடு முழுவதும் தற்போது 99,763 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 80 லட்சத்து 35,261 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து இதுவரை 124.96 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத் துறை புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்