காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காடி பகுதியில் நடந்தகூட்டம் ஒன்றில் நேற்று முன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மத்திய அரசால் மீண்டும் அந்த சட்டப் பிரிவைக் கொண்டுவர முடியும். ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு அதைக் கொண்டு வராது.
370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர 300 எம்.பிக்கள் கைவசம் வேண்டும். வரும் மக்களவை தேர்தலில் 300 எம்.பி.க்களை பெற வேண்டும் என்பதால், சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்று உறுதியளிக்க முடியாது. கடவுள் எங்களுக்கு 300 எம்.பி.க்களை தரட்டும். ஆனால், தற்போதைக்கு அது நடக்கும் என நினைக்கவில்லை. அதனால், பொய்யான வாக்குறுதியை கொடுக்க மாட்டேன். சட்டப்பிரிவு 370 பற்றி பேசுவதை தவிர்க்கிறேன்.
இவ்வாறு குலாம் நபி ஆசாத் பேசினார்.
இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா கூறும்போது, ‘‘ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசா ரணைக்கு வரும் முன்பே மூத்த காங்கிரஸ் தலைவர் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago