மும்பை: மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி, திரிணமூல் காங்கிரசில் இணைந்து வருகின்றனர். இதனால், இரு கட்சிகளுக்கு இடையே பனிப்போர் நிலவுகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, மம்தா சந்தித்துப் பேசினார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இவரும் விவாதித்தனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது: தற்போது நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்க ஒருவரும் இல்லை. இதனால், மாற்று அணி உருவாக்கப்பட வேண்டும். சரத்பவார், மூத்த தலைவர். அரசியல் நிலவரம் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினேன். சரத்பவார் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என ஒன்றும் இல்லை. வரலாற்றில்தான் அது உள்ளது.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரே அணியில் நின்றால் பாஜகவை வீழ்த்துவது எளிதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago