டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைப்பு :

By செய்திப்பிரிவு

டெல்லியில் பெட்ரோல் மீதான வாட் வரி 30 சதவீதத்தில் இருந்து இருந்து 19.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.8 குறைந்துள்ளது. இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதலே அமலுக்கு வரும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது

கடந்த சில மாதங்களாக டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதையடுத்து, கலால் வரியை குறைத்து பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலை ரூ.10-ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. இதையடுத்து பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மாநில அரசுகள் குறைத்தன. தற்போது டெல்லியில் பெட்ரோல், டீசல் மீதான விலை குறைந்தது.

இதையடுத்து டெல்லியில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.97- க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.86.67- ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெருநகரங்களில் மும்பையில் தான் தற்போது எரிபொருள் விலை அதிகமாக உள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட் டத்தில் பெட்ரோலுக்கான வாட் வரியை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8 என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்