நாட்டில் கரோனா பரவல் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு கரோனாதொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 551 நாட்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். மேலும் புதிய கரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஆகும்.
கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 190 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 68,980 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 87,822 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை முந்தைய நாளை விட 3,316 குறைந்து, 1 லட்சத்து 543 ஆகஉள்ளது. இது கடந்த 546 நாட்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். மொத்த நோயாளிகளில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 0.29 சதவீதமாக உள்ளது. இது 2020 மார்ச்சுக்கு பிறகு மிகக் குறைந்த அளவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 12,523 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய நாளை விட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும்.
நாடு தழுவிய தடுப்பூசி செலுத்தும் பணியில் இதுவரை 124 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2.27 கோடிடோஸ்கள் மாநிலங்களில் கையிருப்பில் உள்ளன.
இவ்வாறு அந்த புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago