12 எம்.பி.க்கள் இடைநீக்கம் - மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு :

By செய்திப்பிரிவு

கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் கடைசிநாளான ஆக.11-ம் தேதி மாநிலங்களவையில் அவையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி12 எம்.பி.க்கள் நேற்று முன்தினம்இக்கூட்டத் தொடர் முழுவதும்இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக காங்கிரஸ்மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர், மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்து 12 எம்பி.க்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரினர்.

பின்னர், நேற்று காலை மாநிலங்களவை கூடியதும் 12 எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். ஆனால், அவையில் தீர்மானம் நிறைவேற்றி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தான் இடைநீக்கம் செய்யவில்லை என்றும் இடைநீக்கத்தை ரத்து செய்யும் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்