இந்தியாவில் புதிதாக 8,309 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 236 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் புதிதாக நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு கரோனா தொறறு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,45,80,832 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் ஒரே நாளில் 236 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,68,790 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 9.905 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,03,859 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த 544 நாட்களில் குறைவான எண்ணிக்கை ஆகும். இதுவரை இந்தியாவில் 3,40,08,183 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, நாடு முழுவதும் மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மக்களுக்கு ஒரே நாளில் 36,58,756 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன. இதையடுத்து, இந்தியா முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்கள் 122 கோடியை தாண்டியுள்ளது.
இத்தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago