பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் டிகைத் மும்பையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை உறுதி செய்து தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். நாங்களும் இப்போது வலியுறுத்துகிறோம். குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சினைகளை மக்கள் முன்பாக எடுத்துரைப்போம். விவசாயிகளின் போராட்டத்தின்போது பலர்உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசு விவசாயி களை ஏமாற்ற முயற்சி செய்கிறது. விவசாயிகளையும், வேளாண் தொழிலாளர்களையும் அவமதித்து வருகிறது.
வேளாண் சட்டங்கள் மட்டுமன்றி மின்சார திருத்த மசோதாவையும் திரும்ப பெற வேண்டும். லக்கிம்பூர் கலவரத்தில் தொடர் புடைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும். எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காவிட்டால் வரும் குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயி கள் பேரணி நடத்துவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago