அமராவதி: மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு மத்திய அரசு சார்பில் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படும். இந்த நிதியை அவரவர் தொகுதிகளில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்த வேண்டும். ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபட்லா தொகுதி எம்.பி. நந்திகம் சுரேஷ், அப்பகுதியில் தேவாலயம் நிறுவ எம்பி நிதியிலிருந்து ரூ.40 லட்சம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதே கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.பி.ரகுராம கிருஷ்ணம்ம ராஜு, கடந்த மாதம் மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடல் துறைக்கு புகார் அளித்தார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி புள்ளியியல் துறை இணை இயக்குனர் ரம்யா, ஆந்திர மாநில தலைமை செயலருக்கு கடிதம் எழுதினார். ஆனால், இக்கடிதத்திற்கு இதுவரை விளக்கம் ஏதும் வராத காரணத்தினால், தற்போது மீண்டும் அதே துறையிலிருந்து சற்று காட்டமான கடிதம் ஆந்திர தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago