2070-க்குள் ஆலைக் கழிவு வெளியேற்றம் பூஜ்ய நிலையை அடைய அரசு இலக்கு :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சர்வதேச பருவநிலை கவுன்சில் (ஐசிசி) கூட்டத்தில் காணொலி வாயிலாக நடத்திய ஆலோசனையின் போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசியதாவது:

இந்தியா முழுவதும் 2070-ம் ஆண்டிற்குள் வளிமண்டலத்தை பாதிக்காத கழிவுகளை வெளியேற்றாத ஆலைகள் உள்ள நாடாக உருவாக வேண்டும். அந்த இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். வளி மண்டல பாதிப்பு என்பது யூகத்தின் அடிப்படையிலானது அல்ல என்பதை தற்போது கால நிலைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் நமக்கு உணர்த்தி வருகின்றன.

எதிர்பாரா வறட்சி, பெரு வெள்ளம், புயல், நீடித்திருக்கும் அனல் காற்று, மாறிவரும் பருவ சூழல் ஆகிய பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். பருவ நிலை மாறுபாட்டில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் தொழில் நிறுவனங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இந்தியத் தொழில் நிறுவனங்கள் மிகவும் இக்கட்டான தருணங்களில் பல சாதனைகளைப் புரிந்துள்ளது. அதேபோல நமது புவியைக் காப்பதிலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பருவ மழை மாறுபாடு, காடுகளில் தீ, அதிக அளவிலான வெள்ளப்பெருக்கு, சூறாவளி உள்ளிட்ட பருவ நிலை மாறுபாடுகள் நம்மைச் சுற்றி நிகழ்வதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. இவ்வாறு பூபேந்தர் யாதவ் கூறினார். -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்