மேகாலயா மற்றும் கோவா மாநிலங்களில் காங்கிரஸ் நிர் வாகிகள் பலர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்து வரு கின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்க லாம். அதனை அரசியல் ரீதியாக அணுகிக் கொள்ள வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிளுக்கு இடையே ஒற்றுமையை ஏற் படுத்துவதில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் காங்கிரஸ் கட்சி இணைந்து செயல்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago