வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநில முன்னாள் தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாயாவை இடமாற்றம் செய்த மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத் தரவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், சிடி. ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைககு வந்தது.
அப்போது, ‘‘வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து விசாரிக்க வேண்டும். 1993-94-ல் தலைமை நீதிபதியாக இருந்த வெங்கடாசலய்யா வழக்கு களை விசாரிக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று கோரினார். இந்த யோசனை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதற்கான நட வடிக்கை எடுக்க இதுவே சரியான நேரம். வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறினர்.
பின்னர், வழக்கின் விசா ரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago