கரோனா கட்டுக்குள் இல்லாத நாடுகள் தவிர்த்து - சர்வதேச விமான சேவை டிசம்பர் 15-ம் தேதி ஆரம்பம் :

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பு கட்டுக்குள் இல்லாத நாடுகள் தவிர்த்து பிற நாடுகளுக்கிடையிலான சர்வதேச விமான சேவைகள் டிசம்பர் 15 முதல் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2020 மார்ச்சில் கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு தேவையின் அடிப்படையில் ஏர் பபுள் ஒப்பந்தம் மூலம் குறிப்பிட்ட நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. கிட்டதட்ட 31 நாடுகளுக்கு ஏர் பபுள் திட்டத்தில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகள் வருவதையொட்டி சர்வதேச விமான சேவைகளைத் தொடங்கவேண்டுமென சுற்றுலா துறை யினர் அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து டிசம்பர் 15 முதல் திட்டமிட்ட சர்வதேச விமான சேவைகளைத் தொடங்க அனுமதிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆனால் எல்லா நாடுகளுக்கும் அல்லாமல் கரோனா கட்டுக்குள் உள்ள நாடுகளுக்கு மட்டுமே வழக்கமான விமான சேவை தொடங்கப்பட உள்ளது. கரோனாகட்டுக்குள் இல்லாமல் மீண்டும் புதிய கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 14 நாடுகளுக்கு ஏர் பபுள் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்