இந்திய வர்த்தக கூட்டமைப்பு (ஐசிசி) சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா காணொலி மூலம் பங்கேற்று பேசியதாவது:
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப் பேற்றது முதல் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இப்பகுதியில் அரசியல் ஸ்திரத்தன்மையும் அமைதியும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் அனைத்து மாநில தலைநகரங்களில் இருந்தும் விமான சேவை இயக்கப்படுகிறது.
சமீப காலமாக ஆட்சியில் அமரும் கட்சிகள் 5 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. தேர்தல்கள் வன்முறையின்றி அமைதியான முறையில் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக அம்மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதுடன், நாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்குபெற தயாராக உள்ளன. எனவே, வடகிழக்கு மாநிலங்களில் முதலீடுசெய்ய தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்.
நாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 8 சதவீதம் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன. உலகம் முழுவதும் உள்ள 18 பல்உயிரின மையங்களில் ஒன்றாக வடகிழக்கு பகுதி விளங்குகிறது. இதை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அமித் ஷா பேசினார்.-பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago