குஜராத் மாநிலத்தில் கரோனா தொற்றால் 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இதுகுறித்து குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜித்து வஹானி நேற்று கூறுகையில், ‘‘ராகுல் காந்தி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. குஜராத் அரசின் கணக்கின்படி கரோனா காலத்தில் 10,088 பேர் உயிரிழந்தனர்.
கரோனா காலத்தில் வேறு பல காரணங்களால் உயிரிழந்தவர் களையும் கரோனாவால் உயிரி ழந்தவர்கள் எனக் கூறி ராகுல் காந்தி மக்களைத் தவறாக வழி நடத்துகிறார்’’ என்று தெரிவித்தார்.-பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago