மேகாலயாவில் முகுல் சங்மா உட்பட : 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி தாவல் :

ஷில்லாங்: மேகாலயாவில் கான்ராட் சங்மா தலையிலான தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சியில் உள்ளது. 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் இருந்தனர். இவர்களில் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தார். இந்நிலையில் முகுல் சங்மா உட்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் நேற்று அக்கட்சியை விட்டு விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

மேகாலயா காங்கிரஸ் தலைவராக ஷில்லாங் தொகுதி எம்.பி. வின்சென்ச் எச்.பாலா நியமிக்கப்பட்டதால் முகுல் சங்மா அதிருப்தி அடைந்தார். கடந்த மாதம் கொல்கத்தா சென்ற முகுல் சங்மா அங்கு திரிணமூல் காங்கிரஸ் தேசிய செயலாளர் அபிஷேக் பானர்ஜி, அக்கட்சியின் தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் ஆகியோரை சந்தித்தார். இந்நிலையில் முகுல் சங்மா தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் நேற்று திரிணமூல் காங்கிரஸில் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE