துறவி நரேந்திர கிரி தற்கொலை செய்தது ஏன்? : சீடர்கள், மகன் மீது சிபிஐ குற்றச்சாட்டு :

By செய்திப்பிரிவு

அலகாபாத்: துறவிகளின் மிகப்பெரிய அமைப்பான அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மகந்த் நரேந்திர கிரி. உ.பி.யின் அலகாபாத் பாகம்பரி மடத்தில் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது சீடர் ஆனந்த் கிரி, கோயில் பூசாரி ஆத்ய பிரசாத் திவாரி, அவரது மகன் சந்தீப் திவாரி ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மேற்கண்ட மூவர் மீதும் அலாகாபாத் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், மகந்த் நரேந்திர கிரி தன்னிடம் விரோதம் பாராட்டி வந்த சீடர் ஆனந்த் கிரி, பூசாரி ஆத்ய பிரசாத் திவாரி, அவரது மகன் சந்தீப் திவாரி ஆகியோரால் கடும் மன அதிர்ச்சிக்கு ஆளானார். சமூகத்தின் பார்வையில் அவதூறு மற்றும் அவமானத்தை தவிர்க்க அவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்” என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்