விவசாய நிலங்களை காப்பதற்காக - ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் உ.பி.யில் தத்தெடுப்பு :

By செய்திப்பிரிவு

உத்தர பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாக, பசுக்களை பாதுகாக்கும் வகையில் பல சட்டங்களை அரசு இயற்றி வருகிறது. அதன்படி, தற்போது மாநிலம் முழுவதும் 5,384 பசு பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பசுக்களும், கன்றுகளும் பராமரிக்கப்படுகின்றன.

இந்த பசுக்களை மேய்ச்ச லுக்காக வெளியே விடுவதால், அவை விவசாய நிலங்களில் புகுந்து விளைப்பொருட்களை நாசம் செய்து வருவதாக அண்மைக்காலமாக விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு, புதிய திட்டம் ஒன்றை மாநில அரசு சமீபத்தில் பிறப்பித்தது.

அதன்படி, பசு பாதுகாப்பு மையங்களில் இருக்கும் பசுக்களையோ, கன்றுகளையோ விருப்பமுள்ளவர்கள் தத்தெடுத்து பரமாரித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், அவ்வாறு தத்தெடுப்பவர்களுக்கு மாதந்தோறும் பசு ஒன்றுக்கு தலா ரூ.900 வீதம் உதவித்தொகையாக வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்தது.

இந்நிலையில், உத்தரபிரதேசம் முழுவதும் 1.03 லட்சம் பசுக்களை 56,853 பேர் இதுவரை தத்தெடுத்துள்ளதாக அரசு வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்