காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவு மற்றும் வீடியோவில் கூறி யிருப்பதாவது:
நாடு முழுவதும் கரோனா தொற்றால் இறந்தவர்கள் பற்றிய நம்பகமான தகவல்களை அரசு வெளியிட வேண்டும். கரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
இன்றைய, குஜராத் மாடலில் கரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 மட்டுமே வழங்கப்படுகிறது. புதிய விமானம் வாங்க பிரதமர் மோடியிடம் ரூ.8,500 கோடி பணம் இருக்கிறது. ஆனால், கரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மட்டும் பணம் இல்லை. என்ன விதமான அரசு இது? இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.-பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago