சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலர் பேராசிரியர் ராம் கோபால்யாதவ், இதர சமூக சிந்தனையாளர்கள் எழுதிய கட்டுரைகளை புத்தகமாக தொகுத்து `ராஜ்நீதிகே உஸ் பார்’ என்ற பெயரில் சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.
லக்னோ நகரில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் சமாஜ்வாதி கட்சி நிறுவனரும் உ.பி.முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் பேசியதாவது: நாட்டில் பணவீக்கம், ஊழல், வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துப் போராடவேண்டும்.
இந்த 3 பிரச்சினைகளுக்கும் எதிராக அனைத்து எதிர்க்கட்சி களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்போதுதான் வளமான இந்தியா உருவாகும்.
இந்த விழாவில் கட்சி பாகுபாடின்றி பங்கேற்க பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகளை பேராசிரியர் ராம் கோபால் அழைத்து வந்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் அதுல் குமார் ரஞ்சன், முன்னாள் எம்.பி.யும். காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரமோத் திவாரி, ஆம் ஆத்மி கட்சியின் உ.பி. மாநிலத் தலைவர் சஞ்சய் சிங், ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago