புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு பணிகளை மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே தி்ட்டமிட்ட கட்டுமான திட்டத்தில் சில மாறுதல்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பேருந்து முனையம் மற்றும் அதன் அருகில் பூங்கா அமைக்கும் திட்டத்துக்குப் பதிலாக அந்தப் பகுதியில் குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட உயர் பதவியில் உள்ளவர்களுக்கு வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாறுதல்களை எதிர்த்து ராஜீவ் சூரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பூங்கா அமைக்க ஏற்கெனவே திட்டமிட்ட பிளாட் ஒன் என்று அழைக்கப்படும் பசுமைப் பகுதியை பொது நலன் கருதி பாதுகாக்க வேண்டும் என்று ம் உயர் பதவியில் உள்ளவர்களின் வீடுகள் கட்ட வேறு இடம் கண்டறிய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் அவர் கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டிடங்கள் கட்டுவதும் எங்கு எப்படி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளலாம் என்பதும் அரசின் கொள்கை முடிவு. இதில் தலையிட முடியாது’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago