அமேசான் நிறுவனத்தின் பெங்களூரு மண்டல மேலாளர் சுதாகர்மாவட்ட காவல் கண்காணிப்பாள ரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ‘‘கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கோலார் அருகேயுள்ள பூதிகெரேதொழிற்பேட்டையில் இருந்து செல்போன், லேப்டாப், டிவி உட்பட 300 வகையான பொருட்களை (ரூ.1.64 கோடி) ஏற்றிக் கொண்டுபெங்களூருவுக்கு லாரி புறப்பட்டது. ஆனால் அந்த லாரி மாயமாகி விட்டது'' என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கடத்தப்பட்ட லாரி குறித்து விசாரித்தனர். ஓட்டுநரின் செல்போன் டவர் மூலம் ஆராய்ந்ததில் கோலாரை அடுத்துள்ள நாகலாபுரா கேட் பகுதியில் லாரி இருப்பதை கண்டறிந்தனர். அதில் இருந்த பொருட்கள் காணாமல் போயிருந்தன. பின்னர் லாரி ஓட்டுநர் வாசிம் அஜய் உள்ளிட்ட 4 பேர் நேற்றுகைது செய்யப்பட்டனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த ரூ.1.64 கோடி மதிப்பிலான பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago