திருப்பதி நடைபாதைவிரைவில் சீரமைப்பு : தேவஸ்தானம் தகவல் :

By செய்திப்பிரிவு

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக திருப்பதி - திருமலை இடையே நடை மலைப் பாதை, வாரி மெட்டு நடை பாதை ஆகியவை சீர்குலைந்துள்ளன. திருமலையில் ஆகாய கங்கை, பாப விநாசம் ஆகிய புண்ணிய தீர்த்தங்களுக்கு செல்லும் பாதைகள் மூடப்பட்டு விட்டன.

இந்நிலையில், நேற்று காலை திருப்பதி கபில தீர்த்தம் சிவன் கோயில் இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர் பாகாலா அஷோக் குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சீர் குலைந்து போன பழங்கால மண்டபம் மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென வீர பிரம்மம் கூறினார். மேலும் கபில தீர்த்தம் அருவி, சிவன் கோயில்,  வாரி மெட்டு பாதைகளையும் இவர்கள் ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்