இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா தொற்றால் 10,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களையும் சேர்த்து கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 3,45,10,413 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் 12,154 பேர் குணமடைந்துவீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 3,39,22,037 பேர் தொற்றில் இருந்து குணமடைந் துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் கரோனாவுக்கு 313 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், இதுவரை மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,65,662 ஆக உள்ளது. தற்போது 1,22,714 பேர் கரோனா வுக்காக சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
இத்தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago