இந்தியாவில் கரோனா தடுப்பூசி பணிகளுக்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய கோவின் இணையதளம் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பெரும்பாலான சேவை களுக்கு ஒருவர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறாரா என்பதை சேவை நிறுவனங்கள் அறியும் வகையில் கோவின் இணையதளத்தில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒருவரின் பெயர், மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை கோவின் இணையதளத்தில் பதிவிட்டால் அந்தக் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு நான்கு இலக்க ரகசிய எண் வரும். அந்த எண்ணை இணையதளத்தில் பதிவு செய் தால், அவர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறாரா? எத்தனை டோஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.
இது தனியார் நிறுவனங்கள், டிராவல் ஏஜென்சிகள் ,பல்வேறு அலுவலகங்கள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக் கிறாரா என்பதை அறிவதற்கு உதவும். இத்தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்துள்ளது. -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago