புதுடெல்லி: அருணாச்சல பிரதேசம் சங்லாங் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் பிரிகேடியர் பி.டி.மிஸ்ரா பேசியதாவது:
உலகின் சக்திவாய்ந்த ராணுவங்களில் ஒன்றாக நமது இந்திய ராணுவம் உள்ளது. எந்த சவால்களையும் சந்திக்கும் வலிமை இந்திய ராணுவத்துக்கு உண்டு. நமது எல்லைகளில் எத்தகைய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதை சந்திக்க ஒவ்வொரு ராணுவ வீரரும் தயாராக இருக்க வேண்டும். 1962-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வலுவான தலைமை இருந்திருந்தால் சீனாவுக்கு எதிராக எந்த தலைகீழான நிலைமையையும் இந்தியா சந்தித்திருக்காது. இப்போது கள சமன்பாடுகள் மாறிவிட்டன.
ராணுவத்தினர் தொடர்பான மத்திய அரசின் பார்வையும் செயல்பாடுகளும் இப்போது கடலளவு மாறிவிட்டன. பிரதமர் மோடியும் அவர் தலைமையிலான மத்திய அரசும் ராணுவத்தினரின் நலன்களில் எப்போதும் அக்கறை காட்டுகின்றனர்.ராணுவத்தினர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களுடன் அன்பான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பி.டி.மிஸ்ரா பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago