ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டம் பிச்சியா பஹாரி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவருக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன. இதனால் கோபமடைந்த அவரது கணவர் சித்ரவதை செய்து முத்தலாக் கூறி அவரை விவாகரத்து செய்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த கணவர் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின்படியும், முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின்படியும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முத்தலாக் கூறி முஸ்லிம் ஆண்கள், பெண்களை விவா கரத்து செய்வதை தடுக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு 2019-ல் சட்டம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago