நாடு முழுவதும் 10,302 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

By செய்திப்பிரிவு

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நே்ற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதா வது: நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 10,302 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கேரளாவில் மட்டும் 5,754 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி யுள்ளனர்.

குணமடைவோரின் எண்ணிக்கை சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில்11,787 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் தற்போது 1,24,868 பேர்மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 267 பேர் வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,65,349 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், கரோனா தினசரி பாதிப்பு விகிதம்0.96 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.93 சதவீதமாகவும் உள்ளது. இவை கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக 2 சதவீதத்துக்கு கீழே பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறுஅந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

115.79 கோடி தடுப்பூசி

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 51.59 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, இதுவரை 115.79 கோடி தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்து உள்ளது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்