இந்தியா – பாகிஸ்தான் இடையே அண்மையில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. இதனை இந்தியாவில்சிலர் கொண்டாடியதாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதாகவும் பலர் கைது செய்யப்பட்டனர்.
உத்தர பிரதேசத்தின் சஹா ரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், பாகிஸ்தானுக்கு ஆதர வாக கருத்து தெரிவிக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை உறுதி செய்த போலீஸார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் ஒருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மற்றவரை தேடி வருகின்றனர். -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago