ஜான்சி: எதிரி நாட்டு ரேடார்களை துல்லியமாக கண்காணித்து அவற்றை செயலிழக்க செய்யும் வகையிலான ‘சக்தி’ என்ற பெயரிலான எலக்ட்ரானிக் போர்முறைக் கருவியை (எலக்ட்ரானிக் வார்ஃபேர் சிஸ்டம்) டிஆர்டிஓ நிறுவனம் அண்மையில் வடிவமைத்தது. இந்தக் கருவிகளை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரூ.1,805 கோடி செலவில் 12 கருவிகள் தயாரிக்கப்பட்டு வந்த சூழலில், சமீபத்தில் 2 கருவிகளின் வடிவமைப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து, இந்தக் கருவிகளை இந்தியக் கடற்படையிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒப்படைத்தார். உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தக் கருவியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதுகுறித்து கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நமது போர்க்கப்பலை குறிவைக்கும் ஏவுகணைகள், கடல் எல்லையை கண்காணிக்கும் எதிரிநாட்டு விமானங்கள், உளவு அமைப்புகள் உள்ளிட்டவற்றை கூட இந்தக் கருவி துல்லியமாக கண்காணித்து நமக்கு எச்சரிக்கை விடுக்கும். இந்தக் கருவிகளால் நமது கடற்படையின் திறன் பல மடங்கு அதிகரிக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago