அகர்தலா: திரிபுராவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவாய் மாவட்டம், தெலியமுரா நகரில் புதன்கிழமை இரவு பாஜக – திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “கலிதிலா பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த திரிணமூல் தொண்டர்கள் அருகில் உள்ள பாஜக அலுவலகத்தை அடைந்தவுடன் பிரச்சினை தொடங்கியது. அங்கு இரு கட்சிகளின் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர். லேசான தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி நிலைமையை போலீஸார் கட்டுப்படுத்தினர்” என்றார்.
இந்த மோதலில் 2 போலீஸார் உட்பட 19 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்த போலீஸார், 5 பேரை கைது செய்தனர். இவர்களில் திரிணமூல் தொண்டர் சிகிச்சையில் இருப்பதால் மற்ற நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோதல் காரணமாக தெலியமுரா நகரின் 13,14 மற்றும் 15-ம் வார்டுகளில் வரும் 24-ம் தேதி வரை போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். -பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago