அமராவதி: ஆந்திராவில் பிரகாசம், விசாகப்பட்டினம் மாவட்டங்களிலும் தெலங்கானாவில் ஹைதராபாத்திலும் மாவோயிஸ்ட்களுக்கு மறைமுக அதரவு தெரிவிக்கும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், ஆலகூர பாடு பகுதியில் வசிக்கும் கல்யாண ராவ், விசாகப்பட்டினம் அரிலோவ காலனியில் வசிக்கும் வழக்கறிஞர் தம்பதிகளான நிவாச ராவ் - அன்னபூர்ணா ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதுபோல் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் நாகோலில் உள்ள ரவிஷர்மா, அனுராதா வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர இவர்களது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இரு மாநிலங்களிலும் மொத்தம் 14 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீடியோ, இமெயில் ஆதாரங்கள், பென் டிரைவ்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago