இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் அதிகரிப்பு : அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் இதுவரை மக்களுக்கு 113 கோடி டோஸ் களுக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 38,11,55,604 கோடி டோஸ்கள் 2-வது தவணையாக செலுத்தப் பட்டுள்ளது. 37,45,68,477 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இத்தகவலை மத்திய சுகா தாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேசிய அளவில் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண் ணிக்கை முதல் முறை அதிகரித்துள்ளதாகவும் இந்த குறிப்பிடத்தக்க சாதனை பிரதமர் மோடியின் தொலை நோக்குப் பார்வையாலும் அரசின் முழுமையான அணுகுமுறை யாலும் சாத்தியமாகி உள்ளது என்றும் மன்சுக் மாண்ட வியா தெரிவித்துள்ளார்.

10,197 பேருக்கு கரோனா

கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் 10,197 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 301 பேர் உயிரிழந்துள்ளனர். 12,134 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் இதுவரை 3 கோடியே 38 லட்சத்து 73,890 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் குணமடைவோர் எண்ணிக்கை 98.28 சதவீதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை நேற்று தெரிவித்தது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்