சல்மான் கானுக்கு : மும்பை மேயர் வேண்டுகோள் :

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முஸ்லிம்கள் ஆதரவாக இல்லாதது குறித்து மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் நேற்று கூறும்போது, ‘‘தடுப்பூசி போடும் போதெல்லாம் முஸ்லிம்களுக்கு மத ரீதியான அச்சங்கள் உள்ளன. இதனால் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்து வது தாமதமாகிறது. சல்மான் கான் போன்ற நடிகர்கள் முஸ் லிம்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஊக்கு விக்க வேண்டும்" என்றார்.

முன்னதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறும்போது, “கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மதத் தலைவர்கள் மற்றும் சல்மான் கான் போன்ற பிரபலங்களிடம் மாநில அரசு பேசி வருகிறது” என்று தெரிவித்தார். -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்