பெங்களூரு: பெங்களூருவில் 24-வது தொழில்நுட்ப மாநாட்டை, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். இதில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, தொழிலதிபர் கிரண் மஜூம்தர் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் உள்ளிட்டோர் இணைய வழியில் பங்கேற்று உரையாற்றினர்.
நாளை வரை 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய தொழில் முனைவோர் பங்கேற்கும் அரங்க நிகழ்வுகளில், 300 தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்றுகின்றனர்.
தொடக்க நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசுகையில், “நாட்டுக்கும் மக்களின் முன்னேற்றத்துக்கு பலன் தரும் பல புதிய திட்டங்கள் இந்த மாநாட்டின் மூலம் ஆரம்பமாக இருக்கிறது'' என்றார்.
மாநாட்டின் 2-வது நாளான இன்று, சிட்னி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றும் உரை இணைய வழியாக ஒளிபரப்பாகிறது. இதே போல இந்திய - அமெரிக்க புத்தாக்க கூட்டணி மாநாட்டில் இடம்பெறும் மோடியின் உரையும் இந்த மாநாட்டிலும் ஒளிபரப்பாகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago