நகர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் 2 வியாபாரிகள் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

நகர்: நகரின் ஹைதர்போரா பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் மாலை சுற்றிவளைத்தனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் வணிக வளாகத்தின் உரிமையாளரும் அங்கு ஹார்டுவேர் பொருட்கள் மற்றும் சிமென்ட் கடை நடத்தி வந்தவருமான அல்டாப் பட், கம்யூட்டர் சென்டர் நடத்தி வந்த பல் மருத்துவர் முதாசிர் குல் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “இவர்கள் இருவரும் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள். இவர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது துப்பாக்கிச் சண்டைக்கு இடையில் சிக்கியதால் இறந்திருக்கலாம். விசாரணைக்கு பிறகே நடந்தது தெரியவரும்” என்றனர். ஆனால் இருவரும் அப்பாவிகள் எனவும் தீவிரவாதிகளுடன் அவர்களுக்கு தொடர்பில்லை எனவும் அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 2 வியாபாரிகள் கொல்லப்பட்டதற்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நம்பத்தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்