இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,865 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 197 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்துமத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 8,865பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, கடந்த 287 நாட்களில் இல்லாத குறைவான அளவாகும். அதன்படி, நாட்டில் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,30,793-ஆக குறைந்துள்ளது. அதே சமயத்தில், பெருந்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த24 மணிநேரத்தில் மட்டும் 11,971பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைவோரின் விகிதம் 98.27 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, நேற்றுஒரே நாளில் பெருந்தொற்று பாதிப்புக்கு 197 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் கரோனா காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,63,852-ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரத்தின்படி, தினசரி கரோனா பாதிப்பு விகிதம் 1.07சதவீதமாக இருக்கிறது. இது, கடந்த 43 நாட்களுக்கும் மேலாக 2 சதவீதத்துக்கும் கீழே பதிவாகி வருகிறது. இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் 11.07 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago