டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. காற்றின் தரக்குறியீடு 400- ஐ தாண்டி உள்ளது. காற்று மாசை குறைக்க தண்ணீர் தெளிக்கும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காற்று மாசைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்த தயாராக இருப்பதாக டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின்சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஹரியாணா, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் எரிக்கும் வேளாண் கழிவுப்பொருட்கள் காற்று மாசுக்கு 10 சதவீதம் காரணம் என்றார்.
பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
வேளாண் கழிவுப் பொருட் களை எரிப்பது மட்டுமே காரணம் அல்ல. தொழிற்சாலைகள், அத்தி யாவசியமற்ற போக்குவரத்து, கட்டுமானப் பணிகள் போன்றவை முக்கிய காரணமாக உள்ளன. காற்று மாசைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசு 24 மணி நேரத்தில் அவசரக் கூட்டம் நடத்த வேண்டும். இதில் டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களின் தலைமைச் செய லாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 17-ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தனர்.-பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago